சிவகங்கை மாவட்டத்தில் அரசு பணியிடங்கள் | தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம்!

Follow Us
Sharing Is Caring:

சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக பல வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த வேலை வாய்ப்புகள் சிவகங்கை சுற்றியுள்ள வட்டாரமான காளையார் கோவில், திருபுவனம், திருப்பத்தூர், சாக்கோட்டை, இளையான்குடி, சிவகங்கை போன்ற இடங்களில் (வட்டார இயக்க மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர்) பணியிடங்கள் வந்துள்ளது.

சிவகங்கை TNSRLM வட்டார இயக்கம் மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியின் முழு விவரங்கள் உங்களுக்கு இந்த கட்டுரையில் கிடைக்கும்.

குறிப்பு: இந்த வேலைக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும், அதோடு இது ஒப்பந்த அடிப்படையிலான வேலையாகும்.

வட்டார இயக்க மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் Govt பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் எவ்வாறு விண்ணப்பிப்பது, அதற்கான கல்வி தகுதி, கூடுதல் தகுதி போன்றவற்றை இந்த வலைதள கட்டுரையில் தெளிவாக பார்க்க முடியும்.

Recruitment for Block coordinator and Block manager in TN Rural Livelihood Mission, Sivaganga district

Recruitment for Block coordinator and Block manager in TN Rural Livelihood Mission, Sivaganga district

அறிவிப்புsivaganga.nic.in (TNSRLM)
பதவிஒப்பந்த அடிப்படையில்
காலியிடம்08
முன் அனுபவம்2 to 3
விண்ணப்பிக்க கடைசி தேதி11/07/2023

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சிவகங்கை மாவட்டம்:

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள வட்டார இயக்க மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக TNSRLM அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணி இடத்திற்கான விண்ணப்பங்கள் 26/06/2023 முதல் நீங்கள் அதிகாரப்பூர் வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் எங்களுடைய வலைதளத்தில் அதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சான்றிதழ்களுடன் நேரிலோ அல்லது பதி அஞ்சல் மூலமாகவோ நீங்கள் அனுப்பலாம், அனுப்ப வேண்டிய முகவரி வட்டார இயக்குனர் / திட்ட இயக்குனர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்) ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் துறை அலுவலக கட்டிடவளாகம் சிவகங்கை என்ற முகவரிக்கு நீங்கள் விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டும்.

கவனிக்க: விண்ணப்ப படிவத்தை அனுப்பக்கூடிய இறுதி நாளானது 11/7/2023 செவ்வாய்க்கிழமை மாலை 5:45PM, மற்றும் அலுவலக நேரத்தில் காலை 10 மணி முதல் மாலை 5:45 மணி வரை விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகங்கை TNSRLM வேலை வட்டார வாரியான பட்டியல்:

திருப்பத்துர்திருபுவனம்
காளையரர்கோவில்இளையான்குடி
சாக்கோட்டைசிவகங்கை

சிவகங்கை TNSRLM வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

இந்த TNSRLM வேலைவாய்ப்பு பற்றிய தெளிவான விளக்கங்கள் தனித்தனி கட்டுரையாக (தனித்தனி வட்டாரங்களுக்கு) வெளியிடப்பட்டுள்ளது. அவை அனைத்தையும் இந்த கட்டுரையில் மேலே உங்களால் பார்க்க முடியும்.

அப்படி பார்த்ததில் நீங்கள் எந்த வட்டாரத்தை சேர்ந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அந்த வேலை வாய்ப்பு சம்பந்தப்பட்ட கட்டுரையை முழுமையாக படிக்க வேண்டும்.

பின்பு அதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவத்தையும், அறிவிப்பையும் பதிவிறக்கம் செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள கல்வி சான்றிதழ் மற்றும் கூடுதல் தகுதி சான்றிதழ்களை இணைத்து அலுவலக நேரங்களில் காலை 10 மணி முதல் மாலை 5:45 மணி வரை நேரில் கொடுக்கலாம்.

அல்லது இறுதித் தேதியான 11/7/2023 அலுவலகத்திற்கு சென்றடையும் மாறு தபால் மூலம் அனுப்பலாம், அனுப்ப வேண்டிய விலாசம் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது.

TNSRLM அரசு பணிக்கான நிபந்தனைகள் & தகுதிகள்:

  • ஏதேனும் ஒரு படிப்புடன் உயர் கணினி படிப்பில் ஆறுமாத சான்றிதழ் மற்றும் (MS Office) தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். அல்லது கணினி அறிவியல் அல்லது கணினி பயன்பாடுகளில் பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.
  • அதிகபட்ச வயது 28 மிகயாமா ஆகாமல் இருக்க வேண்டும்.
  • சொந்த வட்டாரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி தொடர்ப்பான முன் அனுபவம் இருக்க வேண்டும்.
  • பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய நிபந்தனைகள்:

  • நிர்ணயிக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்திற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.
  • மாவட்ட இயக்க மேலாளர் அலுவலகம் மூலம் நடைபெற உள்ள எழுத்து தேர்வு விவரம் பதிவஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.

TNSRLM Sivagangai Jobs Notification & Application Pdf

Sharing Is Caring:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment