தமிழ்நாடு அரசின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு, அதாவது இயக்குனர் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சென்னை அவர்களின் கடித எண்.1853/HR/TNSRLM/2022, அடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்.
- மூலனூர், திருப்பூர், பொங்கலூர், வெள்ளகோவில் ஆகிய வட்டாரங்களில் உள்ள தற்காலிக 4 வட்டார மேலாளர்.
- காங்கேயம், பல்லடம், (3 காலி பணியிடங்களும்)
- பொங்கலூர், தாராபுரம், ஊத்துக்குளியில் (2 காலி பணியிடங்களும்)
- வெள்ளகோவில் ஆகிய வட்டாரங்களில் உள்ள தற்காலிக 10 வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆக மொத்தம் 14 நபர்கள் தற்காலிகமாக தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், அவர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வட்டார இயக்க மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி விண்ணப்பத்திற்கான தகுதிகள் மற்றும் அது சம்பந்தமான விவரங்களை தெளிவாக இந்த வலைதள கட்டுரையில் பார்க்கலாம் வாருங்கள்.
TNSRLM வட்டார இயக்க மேலாளர் தகுதிகள்:
ஏதேனும் ஒரு பட்டப் படிப்புடன் கூடிய குறைந்தபட்ச ஆறுமாத எம்எஸ் ஆபீஸ் MS OFFICE சான்றிதழுடன் பயிற்சி பெற்று இருக்க வேண்டியது அவசியம்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் பட்டப்படிப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கான வயது வரம்பை பொருத்தவரை விண்ணப்பதாரருக்கு 28 வயதுக்கு மிகாமல் இருக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம் பெண்கள் மட்டும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவிப்பில் நம்மால் பார்க்க முடிகிறது.
குறைந்தபட்சம் 3 வருடம் இதே போன்ற திட்டங்களில் பணிபுரிந்து இருக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையும் இருக்கின்றது, அதாவது இந்த திட்டத்தில் ஏற்கனவே 3 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும் என்பது இதன் அர்த்தமாகும், முன்னனுபவம் குறிப்பிட்டுள்ள காலத்தில் நல்லமுறையில் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதில் எழுந்துள்ளது.
பேச்சு திறன் மற்றும் தலைமை திறன் கொண்டிருப்பவர் ஆகவும், திருப்பூர் மாவட்டத்தில் வசிப்பவர் ஆகவும் இருக்க வேண்டும்.
அதே சமயம் இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
TNSRLM வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதிகள்:
ஏதேனும் ஒரு பட்டப் படிப்புடன் கூடிய ஆறுமாத எம்எஸ் ஆபீஸ் MS OFFICE அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பெண் பாலின தவறாக இருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 2 வருடம் இதே போன்ற திட்டங்களில் முன் அனுபவம் இருக்க வேண்டும், முன் அனுபவம் சார்ந்த விஷயத்தில் நற்பணிஇருக்க வேண்டும்.
பேச்சு திறன் மற்றும் தலைமை திறன் கொண்டிருக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட வட்டாரத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும்.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | TNSRLM |
துறை | மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் |
கடைசி தேதி | 10/11/2022 |
பணி | வட்டார இயக்க மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர் |
இணையதளம் | https://tiruppur.nic.in/ |
தேர்வு முறை | ஆவண சரிபார்ப்பு, எழுத்துத்தேர்வு, நேர்காணல் |
பதிவுமுறையை | (Offline) மூலமாக |
முகவரி | இணை இயக்குனர், திட்ட இயக்குனர் தமிழ்நாடு, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் எண் 305 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருப்பூர் – 641604 |
தொலைபேசி எண் | 0421 297 1149 |
TNSRLM ஊதிய விவரம் என்ன?
வட்டார இயக்க மேலாளர் பணிக்காக 15 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும், வட்டார ஒருங்கிணைப்பாளர் வேலைக்காக 12 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வுமுறை என்ன?
தேர்வு நிலை யை பொருத்தவரை எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு குறிப்பிடப்பட்டுள்ளது, இதில் எழுத்து தேர்வில் 75 மதிப்பெண்களும் 15/11/2022 அன்று நடைபெறும் என்றும் கூறப் பட்டுள்ளது, எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வை 21/11/2022 அன்று நடத்தப்படும், அதில் உங்களுக்கு 25 மதிப்பெண் தேர்வுக்கான வாய்ப்புகள் உள்ளது, அது சம்பந்தமான விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே நீங்கள் பார்க்கலாம்.
TNSRLM வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
வேலைக்கு விண்ணப்பிப்பது மிகவும் சுலபம், தபால் மூலம் எளிமையாக விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிப்பதற்கான விலாசத்தை கீழே பெற முடியும், அதேசமயம் தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது, நீங்கள் தபால் மூலமாகவும் அல்லது நேரிலோ விண்ணப்பத்தி கொடுக்கலாம், அதாவது ஒப்படைக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முகவரி: இணை இயக்குனர், திட்ட இயக்குனர் தமிழ்நாடு, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் எண் 305 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருப்பூர் – 641604
தொலைபேசி எண்: 0421 – 297 1149 இதை தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ அனுப்பி வைக்கவேண்டும்.
ஆனால் ஒரு நிபந்தனை 10/11/2022க்குள் பூர்த்திசெய்யப்பட்ட உங்கள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ளது, அந்த விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள், விண்ணப்ப படிவத்தை கீழே பெற்றுக்கொள்ளுங்கள்
TNSRLM Regional Operations Manager, Regional Coordinator Pdf
Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.
TNSRLM Application Pdf 2022
Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.
JobsTn M Raj is very proficient in article writing job-related vacancy details posts.