தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் (TNSRLM) தென்காசி மாவட்ட இயக்க மேலாண்மை அடிப்படையில் காலியாக உள்ள வட்டார இயக்க மேலாளர் மற்றும் 24 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதிகாரப்பூர்வ (ந.க.எண்: அ1/174/2022) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- Block Co-ordinator
- Block Mission Manager
இந்த அறிவிப்பின் மூலம் தென்காசி மாவட்ட சுற்று வட்டாரத்தில் உள்ள 13 இடங்களில் 27 காலி பணியிடங்கள் உள்ளது.
இந்த பணிக்கான வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை, காலி பணியிடங்கள் விபரம், கல்வித்தகுதி போன்ற பல விஷயங்களை இந்த வலைதள கட்டுரையில் பார்க்க உள்ளோம்.
நீங்கள் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தால் இந்த வேலையில் நிச்சயம் நீங்கள் பங்கு கொள்ளலாம், முக்கியமாக பெண்களுக்கு ஒரு சிறந்த வேலையாக இது இருக்கும்.
இந்த வேலையை பற்றி முழுமையான விவரங்களை பார்ப்பதற்கு முன்பு உங்கள் நண்பர்களுக்கும் இந்த வலைதள கட்டுரையை பகிருங்கள், தென்காசி மாவட்டத்திலுள்ள நமது தமிழ் உறவுகளுக்கு அரசாங்க வேலை கிடைப்பதற்கு முயற்சிப்போம்.
நாங்களும் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் வரும் அரசு வேலைவாய்ப்புகளை பற்றி வெளியிட்டு வருகிறோம், எனவே எங்கள் வலைதளத்தை சம்பந்தப்பட்ட சோசியல் மீடியா குழுக்களில் இணைந்து கொள்ளுங்கள், வாருங்கள் தொடர்ந்து வலைதளத்தில் பயணிக்கலாம்.
TNSRLM வேலைக்கான கல்வி தகுதி என்ன?
வேலைக்கான கல்வி தகுதியை பொருத்தவரை ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் நீங்கள் பட்டப் படிப்பை முடித்தவர் ஆக இருக்க வேண்டும் என்று கோரிக்கை வந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், எம்எஸ் ஆபீஸ்-ல் (MS Office) குறைந்தபட்சம் ஆறு மாத கணினி அனுபவமும் (பயின்றதற்கான) அனுபவ சான்று உங்களுக்கு தேவைப்படும்.
மேலும் வாழ்வாதார இயக்கம் துறை சார்ந்த திட்டச் செயல்பாடுகளில் குறைந்தபட்சம் இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகள் அனுபவம் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதில் வட்டார இயக்க மேலாளர் (Block Mission Manager) பணிக்கு மூன்று வருடங்கள் அனுபவமும், வட்டார ஒருங்கிணைப்பாளர் (Block Co-ordinator) பணிக்கு 2 வருட பணி அனுபவமும் தேவை என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு நம்மால் பார்க்க முடிகிறது.
அறிவிப்பை முழுமையாக பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு எங்கள் வலைதள கட்டுரையில் கிடைக்கும்.
இந்த வேலைக்கான வயது வரம்பு என்ன?
இந்த வட்டார இயக்க மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிகளுக்கும் வயதுவரம்பு 28க்குள் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் அடிப்படையில் உங்கள் வயது 01/07/2022 அடிப்படையில் 28 வயது கணக்கிடப்படும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இதை வைத்தே நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவரா என்பதை தெரிந்துகொள்ளலாம்.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | TNSRLM |
துறை | தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் |
இணையதளம் | Tenkasi.nic.in |
கடைசி தேதி | 20/10/2022 |
சம்பளம் | ரூ. 36,000/- to ரூ. 63840/- |
வேலை இடம் | தமிழ்நாடு, தென்காசி |
தேர்வு முறை | எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் |
பதிவுமுறையை | (Post-Offline) மூலமாக |
காலிப் பணியிடங்களின் விவரம்?
இது 13 இடங்களில் மொத்தம் 27 பணிகள் காலியாக உள்ளது, இவைகளில் 3 காலி காலி பணியிடங்கள் வட்டார இயக்க மேலாளர் களுக்காக ஒதுக்கப் பட்டுள்ளது, மற்றும் 24 காலி பணியிடங்கள் வட்டார ஒருங்கிணைப்பாளர் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுசம்மந்தமான விவரங்களை நீங்கள் கிழே தெளிவாக காணமுடியும்.
வட்டார இயக்க மேலாளர்கள்:
- கடையநல்லூர் 01
- மேலநீலிதநல்லூர் 01
- குருவிகுளம் 01
வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்:
- ஆலங்குளம் 02
- கடையம் 02
- கீழப்பாவூர் 02
- செங்கோட்டை 03
- தென்காசி 01
- வாசுதேவநல்லூர் 02
- கடையநல்லூர் 03
- குருவிகுளம் 03
- மேலநீலிதநல்லூர் 02
தேர்வு முறை எப்படி இருக்கும்?
விண்ணப்பம் தபால் மூலமாக விண்ணப்பிக்க கூடிய முறையாகும், உங்கள் படிவத்தை பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும், அதற்கான விலாசம் வலைதளத்தில் பயணிக்கும் போது கிடைக்கும்.
அப்போது உங்களுடைய படிப்பு சார்ந்த ஆவணங்கள், கூடுதல் அனுபவ சான்றிதழ் போன்றவற்றை சரி பார்த்து, உங்களை நேர்காணலுக்கு அழைப்பார்கள், அப்போது எழுத்து தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு, நேர்காணல் போன்ற விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த வேலை உங்களுக்கு வழங்கப்படும் என்பதை நீங்கள் மறக்க வேண்டாம்.
இந்த வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
இந்த வேலைக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும், அதற்கு முன்னர் நீங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேரடியாக இந்த வலைத்தளத்தில் படித்துப் பார்க்கவும், பதிவிறக்கம் செய்யவும் முடியும்.
அறிவிப்பை பதிவிறக்கம் செய்த பிறகு நீங்கள் எந்த வேலைக்கு விண்ணப்பிக்க உள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், காரணம் இதில் இரண்டு வேலை உள்ளது.
இணைக்கவேண்டிய ஆவணங்கள்:
- அதில் உங்களுடைய படிப்பு சார்ந்த ஆவணம்.
- ஆறு மாதம் எம்எஸ் ஆபீஸ்-இல் பணிபுரிவதற்கான ஆவணம்.
- வாழ்வாதார இயக்கம் துறை சார்ந்த திட்டச் செயல்பாடுகளில் செயலாற்றிய முன் அனுபவ ஆவணம்.
- சம்பந்தப்பட்ட வட்டாரத்தில் குடியிருப்பதற்கான ஆவணம்.
இவை அனைத்தையும் இணைத்து வலைதளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு அனுப்ப வேண்டும், அப்போது உங்கள் முகவரி மற்றும் தொலைபேசி எண் போன்ற விஷயத்தை தெளிவாக எழுதுங்கள், உங்கள் ஆவணம் சரிபார்க்கப்பட்டு உங்களை தொடர்பு கொள்வதற்கு அது தான் சிறந்த வழி என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
Tenkasi District TNSRLM Jobs Vacancy 2022 Pdf
Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.
கவனிக்க:
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு நடக்கும், எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணலுக்கு தெகுதியவர்.
எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் எடுத்த மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு குழுவால் தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு இந்த பணியை ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மதிப்பெண் பட்டியலை கருத்தில் கொண்டு தொடர்ந்து பணியில் ஈடுபடுத்துவது தொடர்பான ஒப்பந்த காலம் புதுப்பிக்கப்படும் வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
எனவே தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள இந்த பணிக்கு நீங்கள் 20/10/2022க்குள் உங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
JobsTn M Raj is very proficient in article writing job-related vacancy details posts.