கவனிக்க: திருவாரூர் மாவட்டத்தில் ஈப்பு ஓட்டுநர் எனப்படும் வாகன ஓட்டுனருக்கு என ஒரு காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த பணியிடத்திற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பிக்க காசிநாளில் 27/10/2023 ஆகும், எனவே இது சம்பந்தமான தெளிவான விளக்கங்களை கீழே பார்க்கலாம் வாருங்கள்.
திருவாரூர் ஒன்றிய தலைப்பில் ஈப்பு ஓட்டுநர் பணியிடம் நேரடி நியமனம் மூலம் நிரப்புதல்:
அறிவிப்பு: திருவாரூர் மாவட்டம் ஒன்றிய தலைப்பில் 31/3/2021 வரை ஏற்பட்டுள்ள ஒரு ஈர்ப்பு ஓட்டுநர் காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வணக்கம் நண்பர்களே! திருவாரூர் மாவட்டத்தில் தற்போது சிறந்த வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு கொண்டிருக்கிறது, அதில் அலுவலக உதவியாளர், மருத்துவமனை உதவியாளர், மற்றும் தற்போது ஈப்பு ஓட்டுனர் என்று பல காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
முக்கியமாக இந்த காலி பணியிடங்களுக்கு எட்டாம் (8th) வகுப்பு படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் நம்மால் பார்க்க முடிகிறது. அதேபோல் தற்போது இந்த வலைதள கட்டுரையில் பேசிக்கொண்டிருக்கும் ஈப்பு ஓட்டுநர் எனப்படும் டிரைவர் வேலைக்கு 8ம் வகுப்பு போதும் என்பதை கட்டுரையில் ஆரம்பத்தில் கூறிவிட்டோம்.
இருந்தபோதும் கூடுதல் தகவல் நமக்கு தேவை! அதாவது, தற்போது இதற்கு விண்ணப்பிக்கக்கூடிய விண்ணப்ப படிவம், வயதுவரம்பு, கூடுதல் தகுதி, கடைசி தேதி போன்ற அனைத்தையும் இந்த கட்டுரையில் நாம் தெளிவாக பார்க்க உள்ளோம் வாருங்கள்.
தேதி: கடைசி தேதி பொருத்தவரை நீங்கள் வரும் 27/10/2023 அன்று பிற்பகல் 5:45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும், அதற்குள் விண்ணப்பிக்கும் வாய்ப்பை தெளிவாக தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க தயாராகலாம் வாருங்கள்.
[dflip id=”9616″ ][/dflip]
Filling up of Jeep Driver Post in Tiruvarur Union Title by Direct Appointment:
அறிவிப்பு | tiruvarur.nic.in |
பதவி | ஜீப் டிரைவர் |
சம்பளம் | 19,500/- to 62,000/- |
காலியிடம் | 1 |
பணியிடம் | திருவாரூர் ஒன்றிய தலைப்பில் |
தகுதிகள் | 8ம் வகுப்பு |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 27/10/2023 |
திருவாரூர் ஈப்பு ஓட்டுனர் வேலைக்கான கல்வித் தகுதி மற்றும் இதர தகுதிகள் என்ன?
திருவாரூர் அரசுப் ஈப்பு ஓட்டுனர் பணியிடத்துக்கு கல்வித்தகுதியை பொறுத்தவரை எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை ஆரம்பத்தில் இருந்தே விவாதித்துக் கொண்டு வருகிறோம்.
மேலும் இதர தகுதிகளை பொறுத்தவரை (LMV license with First aid batch) இருக்க வேண்டும். ஐந்து (5) வருடம் குறையாமல் முன்அனுபவம் ஓட்டுநர் நிலையில் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
திருவாரூர் அரசு ஜீப் டிரைவர் வேலைக்கான ஊதியம் எவ்வளவு?
இந்த வேலைக்கான ஊதியத்தை பொறுத்தவரை தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அரசாணை நிலை எண் 303, நிதி ஊதியக்குழு துறை நாள்: 11/10/ 2017 அடிப்படையில் 19,500/- முதல் 62,000/- வரை பே மெட்ரிக் லெவல் 8 (Pay matrix Level-8) என்ற ஊதிய வழிமுறையை பின்பற்றி ஊதியமும், இதர படிகளும் வழங்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் ஈப்பு ஓட்டுநர் வேலைக்கான வயது வரம்பு:
வேலைக்கான வயது வரம்பை பொருத்தவரை ஒவ்வொருவருக்கும் தனித்தனி வயதுவரம்பு குறிப்பிடப்பட்டுள்ளது, கீழே பாருங்கள்:
- பொது பிரிவினருக்கு: 18 வயது முதல் 32 வயது.
- மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (மற்றும் சீர்பக மரபியினருக்கு): 18 வயது முதல் 34 வயது.
- ஆதி ஆதிதிராவிடர் (அருந்ததியினர் முன்னுரிமை அடிப்படையில்): 18 வயது பூர்த்தி அடைந்து 37 வயதிற்கு மிகை ஆகாமலும் இருக்க வேண்டும்.
நிபந்தனைகள்:
- இனசுழற்சி, வயதுவரம்பு, கல்விதகுதி அற்ற நபர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- அரசு விதிகளின்படி இனசுழற்சி முறையை பின்பற்றி பணி நியமனங்கள் செய்யப்படும்.
- விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் நாளில் அவர்களுடைய வயது 18 பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். கணக்கிடப்பட வேண்டிய நாள், 01/07/2023. அடிப்படையில் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் என்பது குறிப்பிட தக்கது.
திருவாரூர் அரசு ஜீப் டிரைவர் வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிப்பதற்கு உங்களுடைய ஆவணங்கள் அனைத்தையும் தெளிவாக பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட உங்களுடைய விண்ணப்ப படிவத்தை உரிய சான்றுகள் மற்றும் நகலுடன் இணைத்து அரையன் 60, மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சி பிரிவு) மாவட்ட ஆட்சியரகம், திருவாரூர் மற்றும் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ வருகின்ற 27/10/2023 அன்று பிற்பகல் 5:45 மணிக்குள் அனுப்பி வைக்கவேண்டும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பு: தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த விவரங்கள் கடிதம் (Call Letter) மூலம் பின்னர் அனுப்பி வைக்கப்படும்.
முக்கிய குறிப்பு: விண்ணப்ப படிவத்தை எங்களுடைய வலைதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், மற்றும் அதிகாரப்பூர்வ திருவாரூர் அரசு (https://tiruvarur.nic.in/) வலைதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
வாருங்கள் பேசலாம்!
திருவாரூர் மாவட்டத்தில் வெளியாகும் வேலைவாய்ப்புகளை பற்றிய சிறந்த விளக்கங்களை நாங்கள் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறோம். எனவே நீங்களும் விருப்பப்பட்டால் மற்றவர்களுக்கும் இந்த வாய்ப்பை பற்றிய விளக்கங்களை கூறலாம்.
உண்மைதான்! அவ்வாறு கூறும்போது, அவர்களுக்கு இந்த வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். எனவே திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் அனைவருக்கும் இந்த கட்டுரையை பகிருமாறு உங்களை கேட்டுக்கொள்கிறோம்.
M Raj (Mohan Raj) is an expert in crafting informative articles, specializing in education updates and detailed job postings. With a keen eye for detail, Mohan Raj provides readers with accurate and up-to-date information.