தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வெளியீடு! விண்ணப்பத்தினை 14.12.2023 அன்று மாலை 05.00 மணிக்குள்‌ அனுப்புங்கள்!

Follow Us
Sharing Is Caring:

தமிழ்நாடு அரசு சமூகப்பாதுகாப்புத்துறையின்‌ கீழ்‌, மிசன்‌ ட்சாலயா (Mission Vatsalya) வழிகாட்டுதல்‌ நெறிமுறைகளின்‌ படி மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராக கொண்டு இயங்கி வரும்‌ அரியலூர்‌ மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலகு அலுவலகத்தில்‌ காலியாக உள்ள உதவியாளர்‌ உடன்‌ கலந்த கணினி இயக்குபவர்‌ (Assistant cum Data Entry Operator) தற்காலிக பணியிடத்திற்கு கீழ்காணும்‌ தகுதிகள்‌ பெற்றிருக்க கூடிய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைகள்!
தமிழ்நாடு அரசு உதவியாளர் வேலைகள்!
  1. பதவியின்‌ பெயர்‌ – உதவியாளர்‌ உடன்‌ கலந்த கணினி இயக்குபவர்‌ (Assistant cum
    Data Entry Operator).
  2. காலிபணியிடம்‌ – 1 (1 வருட கால ஒப்பந்த அடிப்படையில்‌)
  3. வயது – 42 வயதிற்குட்பட்டவர்‌
  4. கல்வி தகுதி – 12th Pass from a recognized Board / Equivalent Board with Diploma / Certificate in Computers. Weightage for work experience candidate,
  5. தொகுப்பூதியம்‌ – ஒருமாதத்திற்கு ரூ.13,240/-.

விண்ணப்பத்தினை https://ariyalur.nic.in என்ற மாவட்ட இணையதள முகவரிலிருந்து பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌. பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை 14.12.2023 அன்று மாலை 05.00 மணிக்குள்‌ மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலகு, இரண்டாவது தளம்‌, அரசு பல்துறை வளாகம்‌, ஜெயங்கொண்டம்‌ சாலை, அரியலூர்‌ – 621704 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும்‌ பதவி குறித்த தகவல்களுக்கு மிசன்‌ வாட்சாலயா (Mission Vatsalya) வழிகாட்டுதல்‌ நெறிமுறைகளை பார்த்து தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, இ,ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌.

செய்தி வெளியீடு- செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலர்‌, அரியலூர்‌.

கூடுதல் தமிழக அரசு வேலைகள்!
Sharing Is Caring:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment