அறிவிப்பு: அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பல்வேறு காலை பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன, இந்த பணியிடங்கள் புறச்சேவை நிறுவனம் அதாவது (Out Sourcing) மூலம் நிரப்பப்பட உள்ளன.
அரியலூர் மாவட்டத்தில் சிறந்த அரசு வேலை வாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது, இதில் வீடியோ கிரேட்டர், மீம்ஸ் கிரியேட்டர்க்கும் வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அதாவது சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாகவும், விடியோ மற்றும் மீம்ஸ் புகைப்படங்களை உருவாக்க தெரிந்தவர்களுக்கும் வேலைவாய்ப்பு என்பது கூடுதல் சிறப்பம்சமாகவே பார்க்கப்படுகிறது.
மேலும் இதற்கு ஆறு காலி பணியிடங்களும், குறைந்தபட்ச சம்பளம் 25 ஆயிரம் ரூபாய் ஆகவும், அதிகபட்ச சம்பளம் 35 ஆயிரம் ரூபாய் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கான கல்வி தகுதி, வயதுவரம்பு, கூடுதல் தகுதி, மேலும் விண்ணப்பிக்கும் முறை போன்ற அனைத்தையும் இந்த கட்டுரையில் தெளிவாக பார்க்க உள்ளோம்.
ஆகையால் இது அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கான சிறந்த வேலை வாய்ப்பு கட்டுரை என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் அரியலூர் மாவட்ட அரசு இணையதளத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவலை தமிழ் மொழியில் உங்களுக்கு சுலபமாக புரியும் வகையில் நாங்கள் தொகுத்து வழங்க வந்து விட்டோம்.
மேலும் இந்த வேலைக்கு நீங்கள் தகுதியானவரா என்று கட்டுரை முழுமையாக படித்து பார்த்த பிறகு உங்களுக்கு தெரிந்து விடும். அதோடு நீங்கள் விருப்பப்பட்டால் உங்கள் சுற்றத்தாற்றுக்கும் இந்த கட்டுரையை பகிர்ரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். வாருங்கள் வலைதளத்தில் பயணித்து அரியலூர் மாவட்ட அரசு வேலை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
Notification for filling various vacancies in the District Rural Development Agency through Outsourcing
[dflip id=”9166″ ][/dflip]
Details Of Ariyalur District Rural Development Agency Jobs In 2023
அறிவிப்பு | ariyalur.nic.in |
பதவி | Solid Waste Management & Sanitation Expert Liquid Waste Management Expert Planning, Convergence & Monitoring IEC Consultants |
சம்பளம் | 15,700/- To 58,100/- |
காலியிடம் | 6 |
பணியிடம் | அரியலூர் மாவட்டத்தில் |
தகுதிகள் | Bachelor’s Degree, Civil Engineering, Environmental Engineering, B.Tech/MBA.M.Sc., P.G. Degree in Mass Communication / Mass Media. |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15/10/2023 |
அரியலூர் மாவட்டத்தில் வெளியான முதல் மூன்று வேலைவாய்ப்புகள் பற்றி பார்க்கலாம்:
முதலில் (Solid Waste Management & Sanitation Expert) வேலைக்கான காலி பணியிடங்கள் இரண்டு (2), மேலும் (Liquid Waste Management Expert) காலி பணியிடங்கள் ஒன்று (1).
இந்த மூன்று காலிப்பணியிடங்களுக்கும் பேச்சுலர் டிகிரி எமோஷனல் / சிவில் இன்ஜினியரிங் (Bachelor Degree in Environmental Engineering / Civil Engineering) படித்திருக்க வேண்டும். அதோடு 1.2 வருட பணி அனுபவம் இருத்தல் வேண்டும்.
மேற்காணும் இந்த இரண்டு பணிகளுக்குமே (மூன்று காலியிடங்களுக்கும்) மாத ஊதியம் 35,000/- ரூபாய் வழங்கப்படும் என்று அரியலூர் வேலைவாய்ப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவதாக வெளியிடப்பட்ட அரியலூர் அரசு வேலைவாய்ப்பு:
இது (Planning, Convergence & Monitoring) எனப்படும் காலிப்பணியிடம், இந்த காலி பணியிடங்களுக்கான எண்ணிக்கை ஒன்று (1). இதற்கு (B.Tech/MBA.M.Sc.) படித்திருக்க வேண்டும். இப்பணிக்கு மாத உதயமாக 35,000/- ரூபாய் வழங்கப்படும்.
மூன்றாவதாக சொல்லப்பட்ட அரியலூர் வேலையவப்பு:
இது IEC Consultants எனும் பணியிடத்தை நிரப்பும் அறிவிப்பு, இதுதான் நாம் மேலே விவாதித்த இதில் வீடியோ கிரேட்டர், மீம்ஸ் கிரியேட்டர்க்கும் வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது எனும் வேலைவாய்ப்பு.
இதற்க்கு இரண்டு (2) காலிப்பணியிடங்கள் உள்ளது. இந்த Ariyalur IEC Consultants பணியிடத்திற்கான கல்வி தகுதியை பொறுத்தவரை P.G. Degree in Mass Communication / Mass Media படித்திருக்க வேண்டும். மேலும் 2.3 வருடம் பணியா அனுபவம் இருத்தல் வேண்டும். அதோடு இப்பணிக்கு மாத ஊதியம் 25,000/- ரூபாய் வழங்கப்படும்.
அரியலூர் IEC Consultants பணியின் முக்கிய கடமைகள்:
- அரசாங்க அதிகாரிகள், கல்வியாளர்கள், சமூக ஊடகங்களில் செல்வாக்கு உள்ளவர்களுடன் தொடர்பு கொள்வது.
- தேவைப்படும் சூழலில் பணிபுரியும் திறன் பெற்று இருக்க வேண்டும்.
- கணினியில் MS Word, Power Point, Adobe Photoshop தெரிந்திருக்க வேண்டும்.
- மேலும் வீடியோ தயாரித்தல், மீம்ஸ் தயாரித்தல், சுவரொட்டி மற்றும் பிரசாரங்கள் உருவாக்குதல் போன்ற அனுபவம் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.
- தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முன்மாதிரியான எழுதும் திறன்.
- ஒருவருக்கொருவருடன் தொடர்பு கொள்ளுதல், விளக்க உரை அளிக்கும் திறன், தமிழ் கலாச்சாரங்களை புரிந்து கொள்ளுதல் ஆகியவை திறமைகள் இருக்க வேண்டும்.
அரியலூர் மாவட்டத்தில் வெளியான மூன்று அரசு வேலைக்கு வயது வரம்பு:
- Solid Waste Management & Sanitation Expert – 2
- Liquid Waste Management Expert – 1
- Planning, Convergence & Monitoring -1
- IEC Consultants – 2
மேலே குறிப்பிடப்பட்ட 4 வேலைக்கும், ஆறு காலி பணியிடங்களுக்கும் ஒரே வயது வரம்பு தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது 30 வயதுக்குள் இருக்க வேண்டும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் நம்மால் பார்க்க முடிகிறது.
குறிப்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேரடியாக அரியலூர் அரசு (https://ariyalur.nic.in/) வலைதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் எங்களுடைய வலைதளத்திலும் அதை பதிவிறக்கம் செய்வதற்கான வாய்ப்பை கொடுத்துள்ளோம், எனவே அதையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அரியலூர் மாவட்ட அரசு வேலைகளுக்கான விண்ணப்பங்களை எவ்வாறு எவ்வாறு பூர்த்தி செய்வது, எங்கு சமர்ப்பிப்பது?
அரியலூர் மாவட்டத்தில் (01/10/2023) வெளிவந்த இந்த வேலைக்கான விண்ணப்பங்களை வெள்ளை தாளில் தட்டச்சு செய்தோ அல்லது கையெழுத்து பிரதியாகவோ நிரப்பி இணை இயக்குனர்/திட்ட இயக்குனர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட ஆட்சியரகம், அரியலூர் – 62 1704. நான்கு என்ற முகவரிக்கு 15/10/2023 மாலை 5 மணிக்குள் நேரிலோ, அல்லது அஞ்சள் மூலம் ஆகவோ அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்ட அரசு வேலைக்கு தகுதிகள் மற்றும் தேவைகள் என்ன?
சுற்றுச்சூழல் பொறியியல், சிவில் இன்ஜினியரிங் அல்லது வணிகம் மற்றும் தொழில்நுட்பத்தின் நடனம் (B.Tech/MBA/M.Sc.) ஆகியவற்றில் பட்டங்கள் தகுதிக்கான கூடுதல் குறிப்புகளை கேட்கலாம், அதற்க்கு அறிவிப்பை பாருங்கள்.
அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வேலைக்கு வயது வரம்பு என்ன?
30 வயதுக்குட்பட்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேர்நதெடுக்கப்படுவர்.
கவனிக்க: அரியலூர் மாவட்டத்தில் உள்ள நபர்களுக்கான சிறந்த அரசாங்க வேலைவாய்ப்பை பதிவிடும் முயற்சியில் நாங்கள் அவபோது ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம், மேலும் புதிதாக வரும் அரசு வேலைவாய்ப்புகளை உடனே நாங்கள் ஆராய்ந்து அதற்கான சிறந்த தமிழ் மொழி கட்டுரையை வடிவமைத்து உங்களுக்கு வழங்குகிறோம்.
எனவே நீங்கள் அரியலூர் மாவட்ட அரசாங்க வேலைக்கு ஆர்வமாக தேடிக் கொண்டிருந்தால் இந்த கட்டுரை உங்களுக்கு பயனளிக்கும் என்று நம்புகிறோம். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தாலும், உதவி தேவைப்பட்டாலும் தயக்கம் இல்லாமல் கீழே கருத்து பட்டியல் பதிவிடுங்கள், அதற்கான பதிலை விரைவில் கொடுத்து உங்கள் சந்தேகத்தை தீர்த்து வேலை கிடைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்போம், அதற்கான தகுதியும் திறமையை மட்டும் உங்களிடம் இருந்தால் போதுமானது. உங்கள் வருகைக்கு நன்றி, நாங்கள் அடுத்த அரசு வேலை வாய்ப்பு கட்டுரை தேடி செல்கிறோம் வணக்கம்.
M Raj (Mohan Raj) is an expert in crafting informative articles, specializing in education updates and detailed job postings. With a keen eye for detail, Mohan Raj provides readers with accurate and up-to-date information.
I was completed electrical engineering (EEE), can I apply for Ariyalur collector office.
sure, you can apply
Jobs vangancy sir
Soon