மிகவும் பிரபலமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதாவது ஐஓபி (IOB) என்று அழைக்கக்கூடிய வங்கியிலிருந்து புதிய வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை வாய்ப்புகள் தமிழ்நாட்டில் மொத்தம் 12 மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது, எந்தெந்த மாவட்டத்தில் இந்த வேலைவாய்ப்பு உள்ளது, யார் யார் விண்ணப்பிக்கலாம், அதற்கான விதிமுறைகள் என்ன என்பது பற்றி தெளிவான விளக்கங்களை இந்த கட்டுரை உங்களுக்கு வழங்க உள்ளது.

காலி பணியிடங்கள் உள்ள மாவட்டங்கள்:
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- திருச்சிராப்பள்ளி
- விருதுநகர்
- கரூர்
- கன்னியாகுமரி
- புதுக்கோட்டை
- திருவனந்தபுரம்
- பெரம்பலூர்
- தஞ்சாவூர்
- திருநெல்வேலி
- ராமநாதபுரம்
முதலில் இந்த வேலையானது 12 மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது, அதாவது (ஆசிரியர், அலுவலக உதவியாளர்) என மொத்தம் 21 பணியிடங்களை தன்னுள் அடக்கிய ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது IOB வாங்கி.
அந்த அறிவிப்பையும் நேரடியாக படித்து பார்க்கவும், விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும் வாய்ப்பு இந்த பகுதியில் உங்களுக்கு கிடைக்கும்.
நீங்கள் இதற்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், அது சம்பந்தமான தகவல்கள் அனைத்தும் உங்களுக்கு கீழே காத்துக் கிடக்கின்றது.
இந்த வேலையை பற்றி நாம் பேசுவதற்கும் முன்னர் உங்களிடம் சிறு வேண்டுகோள், இந்த வேலை நமது தமிழ் உறவுகளுக்கு கிடைப்பதற்காக நீங்கள் ஒரு வாட்ஸ்அப் குரூப்பில், ஆவது இதைப் பகிர வேண்டும் என்று உங்களிடம் வேண்டுகோள் வைத்துக் கொள்கிறோம்.
காரணம் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் ஆனது ஒரு சிறந்த வேலைவாய்ப்பை, அதுவும் நிரந்தர வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது, மேலும் இதற்கான விடுமுறை நாட்களையும் வருட கணக்கில் தொகுத்து வழங்கியுள்ளது, எனவே இது நமது தமிழ் உறவுகளுக்கு கிடைப்பதற்காக இதை பகிருங்கள், தொடர்ந்து தகவலைப் பெறலாம் வாருங்கள்.
கடைசி தேதி என்ன?

அதாவது இந்த வேலை 09/11/2022 க்குள் விண்ணப்பிக்க கூடிய வேலை, அதற்கு முன்னர் நீங்கள் உங்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சரியான முறையில் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அதற்கான சரியான விலாசம் வலைதளத்தில் தொடர்ந்து பயணிக்கும்போது விண்ணப்பிக்கும் முறையை தொகுத்து வழங்கி உங்களுக்கு கீழே கொடுத்துள்ளோம், அதை நீங்கள் பின்பற்றி கொள்ளலா
இந்த வேலைக்கான கல்வி தகுதி என்ன?
வேலைக்கான கல்வித்தகுதியை பொருத்தவரை நீங்கள் பத்தாம் வகுப்பிலிருந்து இதற்கு தகுதியானவர், அதாவது பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஏதேனும் அல்லது BA, B.Com, B.Sc, BSW, B.Ed, MA, முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் கட்டாயம் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
எனவே பத்தாம் வகுப்பு முதல் முதுகலை பட்டம் முடித்தவர்கள் வரை இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | IOB |
துறை | இந்தியன் ஓவர்சீஸ் வங்கி |
இணையதளம் | iob.in |
கடைசி தேதி | 09/11/2022 |
வேலை இடம் | 12 மாவட்டங்களில் |
தேர்வு முறை | எழுத்து தேர்வு, விளக்கக்காட்சி, தனிப்பட்ட நேர்காணல் |
பதிவுமுறையை | (Offline) மூலமாக |
இந்த வேலைக்கான ஊதியம் எவ்வளவு?
இந்த வேலையைப் பொறுத்தவரை மூன்று விதமான வேலைகளும் 21 விதமான காலி பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியான ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஊதியம் 8,000/- ரூபாயில் தொடங்கி அதிகபட்சமாக 20,000/- ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான விவரங்களை கீழே பார்க்கலாம்.
Faculty | 20,000/- |
Office Assistant | 12,000/- |
Attender | 8,000/- |
இந்த சம்பளமானது பதவிக்கு ஏற்ப மாறுபடுகிறது, பதவி படிப்பு தகுதிக்கு ஏற்ப மாறுபடுகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம், அதை பற்றிய கூடுதல் விளக்கங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பு பார்க்க முடியும்.
வயது வரம்பு என்ன?
இந்த வேலைக்கான வயது வரம்பை பொருத்தவரை குறைந்தபட்ச வயது 22 என்றும் அதிகபட்ச வயது 40 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு எதை வைத்து கணக்கிடப்படுகிறது என்பதை, அதாவது எந்த தேதியை வைத்து கணக்கிடப்படுகிறது என்பதை நீங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் பார்க்க முடியும், அந்த IOB அறிவிப்பை பார்க்கும் வாய்ப்பு நேரடியாக கீழே உங்களுக்கு கிடைக்கிறது, அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
விண்ணப்ப கட்டணம் உண்டா?
இந்த வேலைக்கு கட்டாயம் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும், இந்த விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மூலம் நீங்கள் செலுத்தி அதற்கான டிடியை இணைத்து நீங்கள் அனுப்ப முடியும்.
இந்த விண்ணப்ப கட்டணம் 200 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது, எனவே அது சம்பந்தமான விஷயங்களை தெளிவாக நீங்கள் பின்பற்ற வேண்டும்.
வேலைக்கு தேர்வு செய்யும் முறை எப்படி?
இந்த வேலைக்கு எழுத்து தேர்வு, விளக்கக்காட்சி, தனிப்பட்ட நேர்காணல், ஆவண சரிபார்ப்பு என்ற பல விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
எனவே முதலில் நீங்கள் உங்கள் சார்ந்த தகவல்களை தெளிவாக விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
அதாவது, முதலில் உங்கள் விண்ணப்ப படிவம் சரிபார்க்கப்பட்டு, ஆவணம் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களை தொடர்பு கொள்வார்கள்.
அப்போது விண்ணப்பப் படிவத்தில் உங்களுடைய மொபைல் எண்ணையும் இணைக்க வேண்டியது அவசியம், அது சம்பந்தமான தெளிவான விளக்கங்களை கீழே தொடர்ந்து நாம் பேசலாம்.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
இந்த வேலைக்கு தபால் மூலம் மிகவும் எளிமையாக விண்ணப்பிக்க முடியும், நீங்கள் அனுப்பக்கூடிய விண்ணப்பம் விரைவு தபாலாக இருந்தால் சிறந்ததாக இருக்கும்.
நீங்கள் 09/11/2022 தேதி அல்லது அதற்கு முன்பாக உங்களுடைய தபால் சென்னை ஐஓபி அலுவலகத்தை சென்று அடையுமாறு அனுப்ப வேண்டும், அதற்கான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அனுப்பும்போது விண்ணப்ப படிவத்தை தெளிவாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும், அத்துடன் நீங்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் வகையில் எந்த கல்வி தகுதி அடிப்படையாகக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதை தெளிவாக எழுத வேண்டும்.
நாங்கள் மேலே குறிப்பிட்டதுபோல் உங்களுடைய மொபைல் நம்பர் மற்றும் ஜிமெயில் ஐடி போன்றவற்றையும் சரியான முறையில் கொடுக்கவேண்டும், உங்கள் ஆவணம் சரிபார்க்கப்பட்டு உங்களை நேர்காணலுக்கு மற்றும் எழுத்து தேர்வுக்கு அழைக்கும் போது அது கட்டாயம் தேவைப்படும்.
விண்ணப்ப படிவத்தை பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம், கீழே நேரடியாக விண்ணப்ப படிவத்தை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், அது சரியாக பூர்த்தி செய்து கிழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு அனுப்புங்கள்.
நிதி உள்ளடக்கல் துறை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மத்திய அலுவலகம், 763, அண்ணாசாலை, சென்னை – 600 002 |
The Chief Manager, Financial Inclusion Department, Indian Overseas Bank, Central Office. No. 763, Anna Salai, Chennai – 600 002 |
IOB Indian Overseas Bank Jobs Announcement Pdf 2022
[dflip id=”3338″ ][/dflip]
IOB Indian Overseas Bank Jobs Application Pdf 2022
[dflip id=”3341″ ][/dflip]
கவனியுங்கள்:
உரிய நேரத்திற்கு முன்பாகவே வங்கி சார்ந்த பல வேலைவாய்ப்புகளை நாங்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றோம், அது மக்களுக்கு உதவியாகவும் இருக்கின்றது. அந்த வகையில் இந்த வேலையும் கட்டாயம் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.
தமிழ்நாட்டில் நமது தமிழ் உறவுகள் அனைவருக்கும் சிறந்த அரசாங்க வேலைகள் கிடைக்க வேண்டும், நல்ல அதிக ஊதியம் தரக்கூடிய தனியார் வேலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்த்தோடு எங்கள் குழு எப்போதும் சிறந்த வேலைவாய்ப்பை தேர்ந்தெடுத்து அதை மட்டுமே உங்களுக்கு பரிந்துரைக்கிறது.
எனவே தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ள எங்கள் வாட்ஸ்அப் குழுவில் இணைவதன் மூலம் தொடர்ந்து வேலை வாய்ப்புகளை நீங்கள் பார்க்க முடியும், உங்கள் நண்பர்களுக்கும் பகிர முடியும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வளவு நேரம் எங்களை கட்டுரையில் உங்கள் நேரத்தை செலவிட்ட எண்ணி நாங்கள் பெருமை கொள்கிறோம், அதற்காக நன்றி தெரிவித்தும் விடை பெறுகிறோம், அடுத்த கட்டுரையில் உங்களை சந்திக்கும் வாய்ப்பு காத்திருக்கிறோம்.

JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.