இந்திய உணவு பாதுகாப்பு கழகத்தில் புதிதாக 5000+ அதிகமான காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது, இந்த அறிவிப்பை முன்கூட்டியே உங்களுக்கு தெரிவிக்கும் ஒரு முயற்சி தான் இந்த வலைதள கட்டுரை.
இந்த (FCI) – Food Corporation of India பணிக்கான விண்ணப் பிக்கும் ஆரம்பமானது 06/09,2022 அன்று காலை 10 மணிக்கு துவங்கவுள்ளது. இதற்கு இறுதி தேதி 05/10/2022 மாலை 4 மணி ஆகும்.
இந்த வேலைக்கு நீங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும், அதிக காலியிடங்கள் உள்ளதால் நிச்சயம் தகுதியானவர்களுக்கு பணி வழங்கப்படும்.
இதற்க்கு சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் போன்ற இடங்களில் தீவு மய்யம் இருக்கக்கூடும்.
(FCI) CATEGORY-III வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, இதற்கான தகுதி, வயது வரம்பு, சம்பள விவரம் போன்றவற்றை தெளிவாக உங்களுக்கு தொகுத்து வழங்கும் நோக்கம்தான் இது.
கவனிக்க: அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இருந்து சேகரிக்கப்பட்ட சில தகவல்களை சுலபமாக தமிழ் மொழியில் உங்களுக்குப் புரிய வைக்கும் ஒரு சிறு முயற்சி தான் இது.
கூடுதல் விபரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம், அதனை பார்க்கும் வாய்ப்பும், நேரடியாக அதிகாரபூர்வ தளத்திற்கு செல்லும் வாய்ப்பும் எங்கள் வலைதள கட்டுரையில் சுலபமாக கொடுத்துள்ளோம்.
இது பற்றிய சில தகவல்களை உங்களோடு விரிவாக உரையாடலாம் வாருங்கள்.
ஊதியம் எவ்வளவு?
இந்த வேலை எட்டு விதமாக பிரிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியான ஊதியம் வழங்கப்பட உள்ளது.
J.E. (Civil Engineering)
J.E. (Electrical / Mechanical Engineering)
Steno. Grade-II
AG-III (General)
AG-III (Accounts)
AG-III (Technical)
AG-III (Depot)
AG-III (Hindi)
அனைத்து பதவிக்கும் தனித்தனியான ஊதியம் குறைந்த பட்ச த்தில் இருந்து அதிகபட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அலைகளைப் பற்றிய முழு விபரங்களை நீங்கள் கட்டுரையில் பயணிக்கும்போது உங்களுக்கு தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
குறைந்த சம்பளமாக 28,000/- அதிகபட்ச சம்பளமாக 1,03400 என்பது குறிப்பிடத்தக்கது, இந்த ஊதியம் உங்கள் தகுதியையும், உங்களுக்கு கிடைக்கும் வேலையும் பொறுத்து மாறும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வேலைக்கான வயது வரம்பு என்ன?
நாம் மேலே படித்தது போல் எட்டு விதமான வேலைக்கும் தனித்தனியான வயதுவரம்பு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கு நாம் குறைந்தபட்ச வயது 28 எடுத்துக்கொள்ளலாம், ஆனால் ஒவ்வொரு வேலைக்கும் வயது வரம்பு அந்த வேலைக்கு தகுதியானவர்களை பொறுத்தே இருக்கும்.
அதாவது எந்த வேலைக்கு நீங்கள் தகுதியானவர்கள் என்று உங்கள் வயதும், உங்களுடைய தகுதியும் முடிவு செய்யும், அதை பற்றிய கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு உள்ளது, அதிகாரபூர்வ அறிவிப்பை காணும் வாய்ப்பு கிழே கிடைக்கும்.
கல்வி தகுதி என்ன?
இந்த வேலைக்கான கல்வி தகுதியை பொருத்தவரை (Any Degree, Diploma, B.E, B.Tech, B.Sc) ஏதாவது டிகிரி முடித்து இருந்தால் போதுமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் போது படிப்பு சார்ந்த ஆவணங்களுடன் ஏதேனும் கூடுதல் தகுதி சான்றிதழ் போன்றவை இருந்தால் அனைத்தையும் சேர்த்து இணைக்கும்போது கூடுதல் மதிப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது, எனவே அனைத்தையும் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.
விண்ணப்பிக்கும் முறை எப்படி?
நீங்கள் எங்கள் வலைதளத்தின் மூலமாகவோ அல்லது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் மூலமாகவோ அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
அந்த அறிவிப்பானது 1முதல் 46 பக்க அறிவிப்பு, அந்த அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தையும் தெளிவாக படித்து பாருங்கள்.
பின்பு 06/09/2022 அன்று காலை 10 மணிக்கு விண்ணப்பிக்கும் நேரம் துவங்கப்படுகிறது, அப்போது உங்கள் ஆவணங்கள் அனைத்தையும் சரியாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அனைத்து விஷயங்களும் சரியாக பூர்த்தி செய்ய வேண்டும், பின்பு உங்களை தொடர்பு கொள்ளக்கூடிய மின்னஞ்சலிலும் மொபைல் நம்பரையும் சரியாக பதிவிட வேண்டும். இறுதியாக அனைத்து விஷயங்களும் சரியாக செய்யப்பட்டதா என்பதை பார்க்க வேண்டும்.
இதற்கு அப்ளிகேஷன் பீஸ் 500 ரூபாய் செலுத்த வேண்டிய சூழ்நிலை வரலாம், அதாவது தேர்வு கட்டணம் 500 ரூபாய் வரை செலுத்த வேண்டும்.
இறுதியாக அனைத்து விஷயங்களும் சரியாக செய்யப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு இறுதி பொத்தானை அழுத்தும் போது உங்களுடைய விண்ணப்பம் வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும்.
தற்போது நீங்கள் பதிவேற்றியதற்கான நகலையும் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், அதுவும் ஒரு முக்கிய ஆதாரமாகும்.
அறிவிப்பு | (FCI) – Food Corporation of India |
துறை | இந்திய உணவுக் கழகம் |
அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்க | fci.gov.in |
தகுதி | Any Degree, Diploma, B.E, B.Tech, B.Sc |
சம்பளம் | Rs, 28200/- to Rs. 103400/- |
தொடக்க தேதி | 06/09/2022 |
கடைசி தேதி | 05/10/2022 |
வேலை இடம் | தமிழ்நாடு, இந்தியா |
பதிவுமுறையை | (Online) மூலமாக |
கவனியுங்கள்
நாங்கள் தினமும் பல அரசாங்க வேலைகளை பரிந்துரை செய்து வருகிறோம், அவை அனைத்துமே நல்ல சிறப்பான அரசாங்க வேலைகள் ஆக அமைகின்றது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பதிவு செய்யக்கூடிய இந்த வேலையை நிச்சயம் நீங்கள் பதிவு செய்யலாம்.
5000+ அதிகமான வேலை வாய்ப்புகள் இருக்கின்றது, எனவே உங்கள் சுற்றத்தார், நண்பர், உறவினர் என்று அனைவருக்கும் இதை பகிருங்கள், அவர்களும் இதன் மூலம் பயன் பெறட்டும்.
தமிழ்நாடு தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்க நாம் ஒரு சிறு முயற்சியை மேற்கொள்வோம்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.