மதுரை உசிலம்பட்டியில் 13 அரசு காலிபணியிடகள்: பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்

Follow Us
Sharing Is Caring:

மதுரை சமூகநலத்துறையில் (Vacancies in One Stop Centre, Usilampatti) உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆம், இந்த அறிவிப்பின் அடிப்படையில் மொத்தம் 13 காலிபணியிடகள் உள்ளது, இதில் மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், ஐடி ஊழியர், வழக்கு தொழிலாளி, உதவியாளர், பாதுகாவலர் என்று பல காலி பணியிடங்கள் உள்ளது. உண்மைதான், இந்த பணியிடங்களை பற்றிய தெளிவான விளக்கங்களை இந்த கட்டுரைகள் உங்களுக்கு வழங்க உள்ளோம்.

குறிப்பு: மதுரை உசிலம்பட்டியில் உள்ள ஒன ஸ்டாப் சென்டரில் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு. இது மதுரை சமூக நலத்துறையின் கீழ் இது வெளியிடப்பட்ட அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Notification: District Social Welfare Office, Case Worker Multipurpose Helper Madurai

Application For Vacancies in One Stop Centre, Usilampatti


Details Of Vacancies in One Stop Centre, Usilampatti

அறிவிப்புmadurai.nic.in
பதவிCentre Administrator
Senior Counsellor
IT Staff
Case Worker
Multipurpose Helper
Sccurity Guard
சம்பளம்15,700/- முதல் 50,000/-
காலியிடம்13
பணியிடம்மதுரை உசிலம்பட்டியில்
தகுதிகள்8ம் வகுப்பு முதல்
விண்ணப்பிக்க கடைசி தேதி10/11/2023

கவனிக்க: மதுரை மாவட்ட உசிலம்பட்டியில் வெளியான அரசு வேலை வாய்ப்புகளை பொறுத்தவரையில் மொத்தம் ஆறு விதமான பணிகளில் 13 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது, அவை ஒவ்வொன்றையும் தெளிவான விளக்கங்களோடு கீழே பாருங்கள், அதற்கான கல்வி தகுதி, ஊதியம் போன்ற பல விஷயங்களை அதில் நீங்கள் பார்க்க முடியும்.

Centre Administrator

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

மைய நிர்வாகி எனும் சென்டர் அட்மினிஸ்டர் பணியிடத்திற்கு ஒரு பணியிடம் உள்ளது, இது சம்பந்தமான சில விவரங்களை நீங்கள் கீழே பார்க்க முடியும்:

  • வேலைக்கான ஊதியம்: 30,000/-
  • வேலைக்கான கல்வி தகுதி: சமூகப் பணியில் முதுகலை பட்டம், சமூக அறிவியலில் முதுகலை பட்டம், சட்டத்தில் முதுகலை பட்டம் படித்தவர்கள் மற்றும் உளவியல் முதுகலை பட்டம் பெற்றவர்கள் அல்லது அரசு சாரா திட்டத்துடன் நிர்வாக அமைப்பில் பெண்களுக்கு தொடர்பான பாதுகாப்பில் பணி புரிந்ததில் குறைந்தபட்சம் ஐந்து வருடம் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள்: பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
  • நிபந்தனை: OSC செயல்பாடுகளின்படி 24×7 என்ற விதத்தில் விண்ணப்பதாரர்கள் மூன்று ஷிப்ட் வேலை செய்ய வேண்டும்.
  • குறிப்பு:விண்ணப்பதாரர்கள் உள்ளூரில் வசிப்பவர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Senior Counsellor

மூத்த ஆலோசகர் எனும் இந்த மூத்த ஆலோசகர் பணியிடத்திற்கான காலியிடம் ஒரு பணியிடம் மட்டுமே உள்ளது, இது சம்பந்தமான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

  • வேலைக்கான ஊதியம்: ஊதியத்தை பொறுத்தவரை 20 ஆயிரம் ரூபாய் ஊதியமாக நிர்ணிக்கப்பட்டுள்ளது.
  • கல்வி தகுதி: சுகாதாரத் துறையில் பின்னணியுடன் உளவியல் பட்டம் / மனநலம், நரம்பியல் ஆகியவற்றில் தொழில்துறை பட்டம் / டிப்ளமோ மற்றும் மாவட்ட அளவில் அரசு அல்லது அரசு சாராது சுகாதார திட்டத்தில் பணிபுரிந்ததில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள்: பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க கூடிய வேலை.
  • நிபந்தனை: வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் மூன்று ஷிப்டுகளில் வேலை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

IT Staff

ஐடி ஸ்டாப் எனப்படும் ஐடிஐ ஊழியர்கள் வேலைவாய்ப்புக்கு ஒரு காலி பணியிடத்தை நம்மால் பார்க்க முடியும், இந்த பணியிடத்திற்கான விவரங்களை கீழே பாருங்கள்:

  • ஊதியம்: இந்த மதுரை உசிலம்பட்டியில் வெளியான ஐடி ஊழியர் பணியிடத்திற்கு மாத பலன் 18,000 ரூபாய் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • கல்வித் தகுதி: கல்வி தகுதி பொறுத்த வரை கையின் கணினி, ஐடி போன்றவற்றில் பட்டதாரி பட்டமும், மற்றும் தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் உயர் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். தரவு மேலாண்மை, செயல்முறை ஆவணங்கள் மற்றும் இணைய அடிப்படையிலான விஷயங்களில் அரசு அல்லது அரசு சாரா ஐடி சார்ந்த நிறுவனத்தில் மாநில அல்லது மாவட்ட அளவில் குறைந்தபட்சம் மூன்று வருட அனுபவம் இருக்க வேண்டும்.
  • வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள்: உசிலம்பட்டி அரசு IT Staff வேலைக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
  • நிபந்தனை: விண்ணப்பதாரர்கள் OSC செயல்பாட்டின் படி மூன்று ஷிப்ட்டு வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை வரும்.
  • கவனிக்க வேண்டும்: வேலைக்கு உள்ளூர் நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Case Worker

கேஸ் ஒர்க்கர் எனப்படும் வழக்கு தொழிலாளி பணியிடத்திற்கு மொத்தம் ஆறு காலி பணியிடங்கள் உள்ளது, இந்த பணியிடத்தை பெற விருப்பப்படுபவர்கள் கீழே உள்ள தகவலை தெளிவாக படியுங்கள்:

  • வேலைக்கான ஊதியம்: வேலைக்கான ஊதியம் 15 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • கல்வி தகுதி: மதுரை வழக்குப் பணியாளர் கல்வி தகுதியை பொருத்தவரை சமூகப் பணி, ஆலோசனை உளவியல், அல்லது மேம்பாடு மேலாண்மை ஆகியவற்றில் இளங்கலை பட்டம். மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைத் துறையில் குறைந்தபட்சம் 1 வருட பணி அனுபவம்.
  • விண்ணப்பதாரர்கள்: இந்த வேலைக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • விண்ணப்பிக்கும் நபர்கள்: விண்ணப்பதாரர்கள் உள்ளூரில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
  • முக்கிய குறிப்பு: வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 24×7 விதிகளின்படி 3 ஷிப்ட் வேலை செய்ய வேண்டியிருக்கும்.

OSC செயல்பாடுகளின்படி 24×7, 3 ஷிப்டுகளில் வேலை என்றால் என்ன?

இந்த வேலையை பொறுத்தவரை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை வேலை செய்ய வேண்டி இருக்கும், பின்பு மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை வேலை செய்ய வேண்டி இருக்கும், அல்லது இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை வேலை செய்ய வேண்டி இருக்கும்.

உதாரணத்திற்கு காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை ஒரு ஷிப்ட், மேலும் மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரு ஷிப்ட், இரவு 8:00 மணி முதல் காலை 6 மணி வரை ஒரு ஷிப்ட்.

Multipurpose Helper

ஹெல்ப்பர் எனும் உதவியாளர் பணிக்கான காலி பணியிடங்கள் இரண்டு ஒதுக்கப்பட்டுள்ளது, அது சம்பந்தமான விவரங்களை கீழே பாருங்கள்:

  • Multipurpose Helper வேலைக்கான ஊதியம்: வேலைக்கான ஊதியத்தை பொருத்தவரை மாதம் 6,400 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • கல்வித் தகுதி: கல்வி தகுதி பொருத்தவரை பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம், தங்கும் இடங்கள் / ஹவுஸ் கீப்பிங் போன்ற விஷயங்களில் முன்ன அனுபவம் பெற்று இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் சமைக்க தெரிந்த நபராகவும் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள்: பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • முக்கியமானது: உள்ளூரில் வசிக்கும் பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
  • கவனிக்க: OSC செயல்பாட்டின் அடிப்படையில் இரண்டு ஷிப்ட் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கும். உதாரணத்திற்கு காலை எட்டு மணி முதல் இரவு 8 மணி வரை ஷிப்ட், இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை.

Security Guard

செக்யூரிட்டி கார்ட் எனப்படும் இந்த பாதுகாவலர் பணிக்கு மொத்தம் இரண்டு காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது, அது சம்பந்தமான கூடுதல் விவரங்களை கீழே பாருங்கள்:

  • வேலைக்கான ஊதியம்: இந்த மதுரை மாவட்ட அரசு செக்யூரிட்டி வேலைக்கு பத்தாயிரம் ரூபாய் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • கல்வி தகுதி: Security Guard வேலைக்கான கல்வி தகுதியை பொருத்தவரை பத்தாம் வகுப்பு மற்றும் இரண்டு ஆண்டுகள் பாதுகாப்பாலியாக பணியாற்றிய அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள்: பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள்: உள்ளூர் நபர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
  • முக்கியம்: OSC அடிப்படையில் வேலை செய்ய வேண்டி இருக்கும். உதாரணத்திற்கு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை முதல் ஷிப்ட், இரண்டாவது ஷிப்ட் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:

உங்களுடைய விண்ணப்பங்கள் வரும் 10/11/2023க்கு முன்னதாக அலுவலகத்தை சென்றடையுமாறு விரைவு தகவல் மூலம் அனுப்ப வேண்டும், அனுப்ப வேண்டிய விலாசம் உங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அது தெளிவாக பாருங்கள்.

விலாசம்: District Social Welfare Officer, District Social Welfare Office, Third Floor, Additional Building of Collectorate, Madurai – 20
Madurai Social Welfare Department Vacancies: Apply Now!
Madurai Social Welfare Department Vacancies Alert

முக்கிய குறிப்புகள் பற்றி பேசலாம்:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள ஒன ஸ்டாப் ஸ்டாண்டரையில் வெளியான காலி பணியிடங்கள் பற்றிய தெளிவான விளக்கங்களை கட்டுரையில் வழங்கியிருக்கிறோம், இதில் எந்த பணிக்கு நீங்கள் தகுதியானவர்கள் என்பது தேர்வு செய்து அதற்கான விண்ணப்ப படிவம் அதிகரிப்பு அறிவிப்பு போன்றவற்றை வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

முக்கியமாக அதை அதிகரிப்பூர்வ மதுரை மாவட்ட வலைத்தளத்திலும் பதிவிறக்கம் செய்து விடலாம், எங்களுடைய வலைதளம் மூலமாகவும் டவுன்லோட் செய்யலாம் என்பதை தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறோம், அடுத்த வேலை வாய்ப்பில் சந்திக்கிறோம் நன்றி வணக்கம்.

Sharing Is Caring:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment