மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்ட பழங்குடியினர் பிரிவில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ந.க.எண்: 44650/202/ஊ.வ12 அறிவிப்பின் அடிப்படையில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், மோட்டார் வாகன சட்டப்படி ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் வெளியான அரசாங்க அறிவிப்பின் மூலம் சேகரிக்கப்பட்ட முக்கிய தகவல்களை தமிழ் மொழியில் உங்களுக்கு தொகுத்து வழங்க உள்ளோம், இந்த தகவலை மதுரை மாவட்டத்தில் உள்ள நபர்களுக்கு பகிருங்கள்.
மேலும் இந்த அறிவிப்பின் அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம், அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது சம்பந்தமான நிபந்தனைகள், கூடுதல் கேள்விகளுக்கு தெளிவாக விளக்கம் இங்கு கிடைக்கும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்கும் விண்ணப்பமும் கீழே உங்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது, தொடர்ந்து இந்த வலைதளத்தில் பயணித்து தகவலைப் பெறலாம் வாருங்கள்.
Madurai District Govt Jobs கல்வித்தகுதி?
இந்த வேலைக்கான தகுதியை பொருத்தவரை ஈப்பு ஓட்டுநர் பணியிடத்துக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, எனவே எட்டாம் வகுப்பு முதல் அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதர தகுதிகள் மோட்டார் வாகன சட்டம் 1988 மத்திய சட்டம் 59/1988 அடிப்படையில் தமிழக அரசின் தகுதி அதிகாரியால் வழங்கப்பட்ட தகுதியான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
அடுத்து முக்கியமானது: 5 ஆண்டுகளுக்கு குறையாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டி அமைக்காண நடைமுறை அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது, இந்த விஷயத்தை பின்பற்றுதல் அவசியம்.
வயது வரம்பு என்ன?
வயது வரம்பு பிரிவு வாரியாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது, குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்ச வயது 55 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் பழங்குடியினருக்கு குறைந்தபட்ச வயது 18 லிருந்து 37 வயது அதிகபட்ச வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளது, மேலும் பழங்குடியினரில் முன்னாள் ராணுவத்தினர் 18 வயது முதல் 55 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதோடு அதிகபட்ச வயதுவரம்பு பூர்த்தி அடைந்தவராக இருந்தால் ஏற்றுக் கொள்ளப்படாது என்றும், தமிழ்நாடு அரசு பணியாளர் பணி சட்டம் 2016 பிரிவில் 3ஜி அடிப்படையில் ஏற்கனவே அரசு பணியில் உள்ள முன்னாள் ராணுவத்தினர் எவரும் இந்த முன்னாள் ராணுவத்தினர் பிறவிக்கான அதிகபட்ச வயது வரம்பு சலுகை யோடு கோர இயலாது என்றும் அந்த அறிவிப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | Madurai District, Rural Development and Panchayat Department |
துறை | மதுரை மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை |
பணி | 1 (ஒன்று) ஈப்பு ஒட்டுநர் |
சம்பளம் | Rs. 19,500/- to Rs. 62,000/- |
இணையதளம் | Madurai.nic.in |
தொடக்க தேதி | 01/11/2022 |
கடைசி தேதி | 15/11/2022 |
வேலை இடம் | மதுரை |
தேர்வு முறை | ஆவண சரிபார்ப்பு, நேர்காணல் |
பதிவுமுறையை | (Offline) மூலமாக |
முகவரி | மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி), மாவட்ட ஆட்சியர் அலுவலகம்(வளர்ச்சி பிரிவு), மதுரை -20. |
வேலைக்கான தேதி விபரங்கள்?
இந்த வேலைக்கான அறிவிப்பு தேதி 31/10/2022 அன்று வெளியானது, விண்ணப்பம் பெறப்படும் நாளாக 01/11/2022 அன்று முதல் 15/11/2022 5:45 வரை விண்ணப்பங்கள் பெறப்படும்.
குறிப்பிட்ட நிரப்பப்படாத விண்ணப்பங்கள், தகுதி அற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
எனவே தொடர்ந்து வலைதள கட்டுரை பாதையில் பயணித்து அனைத்து தகவல்களையும் தெளிவாக தெரிந்துகொண்டு விண்ணப்பிக்க துவங்குங்கள், இது ஒரு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய வேலையாகும், அதற்கான விலாசமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஊதியம் விவரம் என்ன?
இந்த வேலைக்கான ஊதியத்தை பொருத்தவரை குறைந்தபட்ச ஊதியமாக ஒன்று 19,500/- இல் தொடங்கி அதிக பட்ச ஊதியமாக 62,000/- வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதர படிகள் வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது, அந்த அறிவிப்பை முழுமையாக படித்து பார்க்கவும், பதிவிறக்கம் செய்யவும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
விண்ணப்பிக்கும் முறை என்ன?
இந்த வேலைக்கான விண்ணப்ப முறையானது தபால் மூலம் விண்ணப்பிக்க கூடிய வேளை, நீங்கள் விரைவு தபால் மூலம் 15/11/2022 மாலை 05:45 மணிக்குள் நீங்கள் தபால் மூலம் அனுப்ப வேண்டும், அனுப்ப வேண்டிய விலாசம் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி), மாவட்ட ஆட்சியர் அலுவலகம்(வளர்ச்சி பிரிவு), மதுரை -20
அதில் சில நிபந்தனைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும், அந்த நிபந்தனைகள் பற்றிய விளக்கங்களையும் கீழே தெளிவாக பார்த்துக்கொள்ளுங்கள், இறுதியாக விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்புங்கள்.
Special Recruitment Drive for Jeep Driver at Rural Development and Panchayat Raj Department Pdf
கவனிக்க:
மதுரை மாவட்டத்தில் சுற்றுவட்டாரத்தில் உள்ள நபர்களுக்கு சிறந்த அரசாங்க வேலை வழங்க வேண்டும், பழங்குடியினர் பிரிவில் காலியாக உள்ள இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் அனைவரும் விண்ணப்பித்து வேலை பெறுவதற்கான முயற்சியை எடுக்கலாம்.
அது மட்டுமல்லாமல் இது சிறந்த அரசாங்க வேலை, உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள், வருங்கால நல்ல வேலைக்காக எங்களுடன் இணைந்திருங்கள், அதற்கான வாய்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற பல வேலைவாய்ப்புகளை நாங்கள் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கும் காரணத்தினால், அவ்வப்போது எங்கள் தளத்தை நீங்கள் பார்வையிடலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம், உங்களுடைய நேரத்தை இவ்வளவு நேரம் எங்கள் தளத்தில் செலவு செய்ததற்கு நன்றி.
JobsTn M Raj is very proficient in article writing job-related vacancy details posts.