இராமநாதபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள இரவுக் காவலர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பை காண்போம் வாருங்கள்!
இந்த இராமநாதபுரம் அரசு இரவுக் காவலர் வேலையை பற்றிய முழு தகவலையும் எங்கள் வலைதளத்தில் உங்களுக்காக கொடுத்துள்ளோம்.
அதாவது கமுதி ஊராட்சி ஒன்றியப் பொதுநிதியின் கீழ் ஊதியம் பெறும் இரவுக்காவலர் காலிப்பணியிடத்திற்கு நேரடி நியமனம் பற்றிய இணையதள அறிவிக்கை இது.
வேலையின் விவரங்கள்:
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியம், பொது நிதியின் கீழ் ஊதியம் பெறும் தலைப்பில் காலியாக உள்ள 1 இரவுக்காவலர் பணியிடத்திற்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த வேலைக்கான சம்பளம் 15,700/- முதல் ரூ.50,000/ வரை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பினை பொறுத்தவரை 01.07.2023 அன்றைய தேதியில் பொதுப்பிரிவினர் 18-32 வயதிற்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீரமரபினர் 18- 34 வயதிற்குள்ளும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிட அருந்ததியர் 18- 37 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கவனிக்க: மேலும் இதற்கான இனசுழற்சியை பொறுத்தவரை பொதுப்போட்டி முன்னுரிமை அற்றவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் வெளியான இந்த இரவுக்காவலர் பணியிடத்திற்கான கல்வித் தகுதியினை பொறுத்தவரை எழுதப் படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.
விண்ணப்பம்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 20.11.2023 அன்று மாலை 05.00 மணிக்குள் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இப்பணியிடத்திற்கான மாதிரி விண்ணப்பப் படிவத்தினை எங்கள் வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
இவ்வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான சில நிபந்தனைகள் கொடுக்கப்பட்டுள்ளது அவற்றையும் உங்களுக்கான எங்கள் வலைதளத்தில் பகிர்ந்துள்ளோம் கீழே பாருங்கள்:
- விண்ணப்பத்தாரர்கள் கல்வித் தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று மற்றும் இதரச் சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்ப வேண்டும்.
- வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- விண்ணப்பதாரர் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றியத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
கவனிக்க: தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும். விவரம் தனியே அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். இந்த அறிக்கையினை (Notification) ரத்து செய்வதற்கான அனைத்து அதிகாரமும் நியமன அலுவலருக்கு உண்டு.
Ramanathapuram Recruitment of Night Watchman in Kamuthi Block
[dflip id=”10813″ ][/dflip]
அறிவிப்பு | ramanathapuram.nic.in |
பதவி | Night Watchman |
சம்பளம் | 15,700/- TO 50,000/- |
காலியிடம் | 01 |
பணியிடம் | in Kamuthi Block |
தகுதிகள் | 8th Pass (எழுதப்படிக்க தெரிந்தால் போதும்) |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20/11/2023 |
M Raj (Mohan Raj) is an expert in crafting informative articles, specializing in education updates and detailed job postings. With a keen eye for detail, Mohan Raj provides readers with accurate and up-to-date information.