10th, 12th, ITI போதும் தெற்கு ரயில்வே வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!

Follow Us
Sharing Is Caring:

சில நாட்களாகவே தெற்கு இரயில்வே பணிக்கு அதிக நபர்கள் விண்ணப்பித்து வருகின்றார்கள், இதில் திருச்சி மற்றும் சென்னை போன்ற இடங்களில் பல வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளது, மேலும் அனைத்துமாவட்ட நபர்களும் விண்ணப்பிக்கலாம்.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இந்த வேலை வாய்ப்புக்கு 3,154 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும் இது அப்ரண்டீஸ் பணி என்பது குறிப்பிடத்தக்கது, இந்த பணிக்கு 31/10/2022 அன்று வரை இறுதி தேதி கொடுக்கப்பட்டுள்ளது.

TN Southern Railway Apprentices Jobs 2022

ஒவ்வொரு வேலைகளுக்கான காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகவல், அதற்கான கல்வித் தகுதி போன்ற விஷயத்தை தமிழ் மொழியில் தெளிவாக பார்க்க உள்ளோம்.

இதில் படித்து முடித்த பிரஷர் என்று கூறக்கூடிய அனைவரும் விண்ணப்பிக்க கூடிய ஒரு அப்ரண்டீஸ் வேலை என்பதால் இதைத் தெளிவாகப் பார்த்து பயன்பெறுங்கள்.

இதற்கான ஊதியம் மற்றும் விண்ணப்ப முறை போன்ற அனைத்து விஷயங்களையும் நீங்கள் இங்கு பார்க்க முடியும், அது மட்டுமில்லாமல் இது சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பை நீங்கள் இங்கு காணலாம், அதற்கான வாய்ப்பும் இந்த வலைத்தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நமது தமிழ் உறவுகள் விண்ணப்பிக்க ஆசையாக இருப்பார்கள், எனவே அனைவருக்கும் இந்த கட்டுரையை பகிருங்கள் என்று கட்டுரையின் ஆரம்பத்திலேயே உங்களிடம் வேண்டுகோள் வைத்துக் கொள்கிறோம்.

இந்த காலி பணியிடங்களின் விவரம்?

இது மொத்தமாக 3,154 பணியிடங்கள் உள்ளது, இதில் (Signal & Telecommunication Workshop / Podanur) என்ற இடத்தில் 1284 பணியிடங்கள் காலியாக உள்ளது.

மேலும் (Carriage Works, Perambur) என்ற இடத்தில் 1343 காலிப்பணியிடங்கள் உள்ளன, மேலும் (Central Workshop, Golden Rock) என்ற இடத்தில் 527 பணியிடங்கள் காலியாக உள்ளது என்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

இந்த பணிக்கு நீங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்.

தெற்கு ரயில்வே வேலைக்கான வயது வரம்பு?

இந்த வேலைக்கான வயது வரம்பை பொருத்தவரை நீங்கள் புதிதாக, அதாவது படிப்பை முடித்தவர் (Freshers ) ஆக இருப்பின் 29/09/2022 அன்றைய தினத்தின் அடிப்படையில் குறைந்த பட்சம் 15 வயது முதல் அதிகபட்சம் 22 வயது நடக்காமல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை Ex-ITI, MLT ஆக இருப்பின் 29/09/2022 அன்று அடிப்படையில் குறைந்தபட்ச வயது 15 மற்றும் அதிகபட்ச வயது 24 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இது சார்ந்த கூடுதல் தகவல்களையும் நீங்கள் தெளிவாக அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பார்க்க முடியும்.

விவரம்அறிவிப்பு
அறிவிப்புIndian Railway
துறைவிருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு
இணையதளம்sr.indianrailways.gov.in
கடைசி தேதி31-10-2022 till 17.00 Hrs
வேலை இடம்தமிழ்நாடு
தேர்வு முறைMerit List மற்றும் நேர்காணல்
பதிவுமுறையை(Online) மூலமாக
முகவரி32, 42/71, MKN Rd, Guindy, Chennai, Tamil Nadu 600016
jobs tn google news

கல்வி தகுதி என்ன?

இந்த வேலையை பொருத்தவரை பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பணி சார்ந்த பாடப் பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

எனவே ஆர்வம் உள்ள அனைவருமே இந்த ரயில்வே அப்ரென்டிஸ் பணிக்கு விண்ணப்பித்து இந்தப் பதவியைப் பெறலாம், இதை ஆன்லைன் மூலம் தெளிவாக விண்ணப்பிக்க கூடிய அனைத்து உதவிகளும் இந்த வலைதள பகுதியில் உங்களுக்கு கிடைக்கும்.

மேலும் இதை தெளிவாக படித்து பார்க்க கூடிய வாய்ப்பும், அதிகாரப்பூர்வ அறிவிப்பை download செய்யக்கூடிய வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும் என்பதை நினைவில் கொண்டு தொடர்ந்து வலைதளத்தில் தகவலை நோக்கி பயணிக்கலாம் வாருங்கள்.

ஊதியம் எவ்வளவு?

இந்த வேலைக்கு ஊதியம் 6,000/- முதல் அதிகபட்சம் 7,000/- வரை வழங்கப்படுகிறது, இதில் பல்வேறு விதமான வேலைகளுக்கு உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும், அதன் அடிப்படையில் உங்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.

வருங்காலத்தில் ஒரு நிரந்தர ரயில்வே வேலைக்காக இந்த அப்ரென்டிஸ் பணி உங்களுக்கு ஒரு முதல்படியாக அமையும் என்பதை நினைவில் கொண்டு இந்த வேலைக்கு விண்ணப்பிக்க துவங்குங்கள்.

தேர்வு மற்றும் தேர்வு செய்யும் முறை எப்படி இருக்கும்?

அதாவது விண்ணப்பங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் வரவேற்கப்பட்டு அதில் தகுதியானவர்களை நேர்காணல் மற்றும் எழுத்துத்தேர்வு, ஆவண சரிபார்ப்பு போன்ற விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்துவார்கள் அதாவது, மெரிட் லிஸ்ட் என்னும் தேர்வு முறையின் அடிப்படையில் இது நடக்கக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விஷயங்களுக்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள், விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களையும் நீங்கள் முன்பே தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

விண்ணப்பக் கட்டணம்?

விண்ணப்பக் கட்டணத்தை பொறுத்தவரை 100/- ரூபாய் விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இருந்தபோதும் சில பிரிவினருக்கு இந்த விண்ணப்ப கட்டணம் நிராகரிக்கப்பட்டுள்ளது, அதாவது பெண்களுக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது என்று கூறலாம், கீழே அது சம்பந்தமான விளக்கங்களை தெளிவாக காணுங்கள்.

  • SC/ ST /PH/Women: கட்டணம் கிடையாது.
  • மற்ற (பிரிவினர்) நபர்களுக்கு: ரூ.100/-

பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவலையும் தெளிவாகப் பாருங்கள், அதில் விண்ணப்பிக்க கூடிய வலைதளத்திற்கு செல்லும் வாய்ப்பு மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும், படித்து பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.

இவை அனைத்தையும் தெளிவாக தெரிந்து கொண்டு உங்களுக்கான கல்வி சார்ந்த ஆவணங்கள், கூடுதல் தகுதி சான்றிதழ் போன்றவற்றை தயார் செய்து உங்களுடைய ஆவணங்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யுங்கள்.

அப்போது விண்ணப்பக் கட்டணம் செலுத்த நேரிட்டால் கட்டாயம் செலுத்த வேண்டும், மேலும் உங்களுடைய மொபைல் நம்பர், இமெயில் ஐடி போன்ற விஷயங்களை தெளிவாக உள்ளிட்டுகொள்ளுங்கள்.

அனைத்து விஷயங்களையும் தெளிவாக செய்த பிறகு விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்தோமா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு உங்கள் விண்ணப்பத்தை சப்மிட் செய்யுங்கள்.

சப்மிட் செய்ததற்கான ஆதாரம் முகப்பு பகுதியில் தோன்றினால் அதை நகல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் அல்லது ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

Southern Railway Apprentices Pdf Chennai 2022

Southern Railway Apprentices Pdf Trichy 2022

வேலைக்கான கெடு முடிவடைந்தது, வேறு பணியை எங்கள் வலைதளத்தில் தேடுங்கள்

கவனியுங்கள்:

ரயில்வே துறையில் ஒரு அப்பிரேண்டிஸ் வேலை செய்வதற்கான சரியான தருணம் இது, இதுபோன்ற தருணத்தை பயன்படுத்தி நீங்கள் கட்டாயம் இந்த வேலையை பெற முடியும்.

வருங்காலத்தில் நிரந்தர வேலை செய்வதற்கான வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும், பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க கூடிய ஒரு சிறந்த வேலை மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க கூடிய சிறந்த வேலையாக இருக்கிறது.

எனவே இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள் அல்லது உங்கள் சுற்றத்தார், நமது தமிழ் உறவுகள் போன்றவர்களுக்கு பகிருங்கள், அவர்களுக்கும் இது உதவியாக இருக்கும்.

Sharing Is Caring:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment