By JobsTn.In
- அறிவிப்பு: மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தா.கிறிஸ்துராஜ், இ.ஆ.ப., அவர்கள்.
- வேலை: அரசு வேலை
- மாவட்டம்: திருப்பூர்
- துறை: திருப்பூர் மாவட்ட சமூக நல ஆட்சேர்ப்பு.
- பதவியின் எண்ணிக்கை: 7
- தொகுப்பூதியம்: 35,000/-, 18,000/-,10,000/-
- வயது வரம்பு: 35 முதல் 40 வயதுக்குள் இருத்தல் நன்று.
- கல்வி தகுதி: 10வது தேர்ச்சி/தோல்வி மற்றும் பட்டம்.
திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் வேலைவாய்ப்பு பத்திரிக்கைச் செய்தி:
தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட சமூகநலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC), திருப்பூர் மற்றும் உடுமலைப்பேட்டையில் காலியாக உள்ள மைய நிர்வாகி, களப்பணியாளர், பல்நோக்கு உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என அறிவிப்பு வந்துள்ளது.
இதற்கான விண்ணப்ப படிவத்தினை https://tiruppur.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட சமூகநல அலுவலர், அறை எண்.35,36 தரை தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர் என்ற முகவரிக்கு வரும் 21.06.2024 மாலை 5.30 பி.ப மணிக்குள் நேரில் வந்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கவனிக்க: தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தா.கிறிஸ்துராஜ், இ.ஆ.ப., அவர்களால் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. எனவே கீழே உள்ள தகவலை தெளிவாக பார்த்து உடனே விண்ணப்பிக்கலாம்.
மைய நிர்வாகி காலிப்பணியிடங்களின் விவரம்:
- பதவியின் பெயர்: மைய நிர்வாகி
- தொகுப்பூதியம்: மாதம் ரூ.35,000/-
- வயது வரம்பு: 40 வயதுக்குள்
- பணி எண்ணிக்கை: 1 (ஒன்று)
- கல்வி தகுதி: Master of Social Work (MSW)/ Master in Law/ Master of Psychology /Sociology.
மைய நிர்வாகி வேலைக்கு இதர தகுதிகள்:
- திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் பெண் விண்ணப்பதாரராக இருத்தல் வேண்டும்.
- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து மீட்பு மற்றும் ஆலோசனை வழங்குதல் தொடர்பான பணியில் குறைந்தது ஐந்து வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (OSC) 24×7 தங்கி பணிபுரிய விருப்பமுள்ளவராக இருத்தல் வேண்டும்.
- 181 மற்றும் இதர உதவி எண்கள் மூலம் வரும் அழைப்பு தொடர்பான உதவிகளுக்கு தேவை அறிந்து உதவும் எண்ணம் கொண்டவராகவும், களப்பணி புரிய விருப்பமுள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.
- பெண்களுக்கு விழிப்புணர்வு மற்றும் ஊக்கப்படுத்தும் வகையில் அரசு திட்டங்களை சென்றடைய செய்ய ஆர்வம் உடையவராக இருத்தல்.
களப்பணியாளர் காலிப்பணியிடங்களின் விவரம்:
- பதவியின் பெயர்: களப்பணியாளர்
- தொகுப்பூதியம்: மாதம் ரூ.18,000/-
- வயது வரம்பு: 35 வயதுக்குள்
- பணிய எண்ணிக்கை: 5 (இந்து)
- கல்வி தகுதி: Master of Social Work (MSW)/ Master in Law/ Master of Psychology /Sociology
களப்பணியாளர் வேலைக்கு இதர தகுதிகள்:
- திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் பெண் விண்ணப்பதாராக இருத்தல் வேண்டும்.
- மூன்று வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- சுழற்சி முறையில் (24×7) பணிபுரிய ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
- 181 மற்றும் இதர உதவி எண்கள் மூலம் வரும் அழைப்பு தொடர்பான உதவிகளுக்கு தேவை அறிந்து உதவும் எண்ணம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
- பெண்களுக்கு விழிப்புணர்வு மற்றும் ஊக்கப்படுத்தும் வகையில் அரசு திட்டங்களை சென்றடைய செய்ய ஆர்வம் உடையவராக இருத்தல் வேண்டும்.
பல்நோக்கு உதவியாளர் காலிப்பணியிடங்களின் விவரம்:
- பதவியின் பெயர்: பல்நோக்கு உதவியாளர்
- தொகுப்பூதியம்: மாதம் ரூ.10,000/-
- வயது வரம்பு: 40 வயதுக்குள் இருத்தல் நன்று
- பணியிட எண்ணிக்கை: 1
- கல்வி தகுதி: 10th Pass/Fail
பல்நோக்கு உதவியாளர் வேலைக்கு இதர தகுதிகள்:
- திருப்பூர் மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
- சமையல் மற்றும் அலுவலக தூய்மைப் பணியில் அனுபவம் உள்ளவர்கள்.
M Raj (Mohan Raj) is an expert in crafting informative articles, specializing in education updates and detailed job postings. With a keen eye for detail, Mohan Raj provides readers with accurate and up-to-date information.